/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு சேர்க்கை?
/
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு சேர்க்கை?
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு சேர்க்கை?
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு சேர்க்கை?
ADDED : மே 19, 2024 03:28 AM
பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாமா என அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மதர் தெரேசா சுகாதார நிலையம் மற்றும் 9 தனியார் நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இதில், 700க்கும் அதிகமான பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மதர் தெரேசா கல்லுாரியில் -80, தனியார் நர்சிங் கல்லுாரிகளில் 295 என மொத்தம் 375 இடங்கள் உள்ளன. இவை கடந்த காலங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு நர்சிங் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை அளிக்க இந்திய நர்சிங் கவுன்சிலிங் உத்தரவிட்டது. போதிய கால அவகாசம் இல்லாததால் ஒரு முறை விலக்கு அளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து விலக்கு பெறப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது.
இந்தாண்டு நர்சிங் படிப்புகள் பொது நுழைவு தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெறும் என கடந்த ஜனவரி 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு கடந்த ஏப்., 15ம் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்த ஆணை வெளியானது.
இந்நிலையில், நுழைவு தேர்வுக்கான பாடத் திட்டம், நுழைவு தேர்வு விண்ணப்பிக்கும் நாள், தேர்வு நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தேர்வு அறிவித்து, விண்ணப்பம் பெற்று, தேர்வு நடத்தி முடித்து ரிசல்ட் வெளியிட குறைந்தது 45 நாட்கள் ஆகும். வரும் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்வு நடத்தி முடித்து, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வகுப்புகள் துவங்க வேண்டும்.
செப்., 30ம் தேதிக்குள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என இந்திய நர்சிங் கவுன்சில் தெரிவித்துள்ளது. குறைந்த நாட்களே உள்ளதால், தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறையில் கேட்டபோது, லோக்சபா தேர்தல் காரணமாக நுழைவு தேர்வு நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் நுழைவு தேர்வு நடத்தலாமா அல்லது கடந்த ஆண்டை போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை நடத்தலாமா என ஆலோசனை நடந்து வருகிறது' என்றனர்.

