ADDED : ஜூன் 15, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: செட்டிப்பட்டில் ஏ.சி., மெக்கானிக் கழிவறையில் மயங்கி விழுந்து இறந்தார்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 42; ஏ.சி., மெக்கானிக். இவரது மனைவி சிவசங்கரி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் நேற்று அதிகாலை 2:15 மணிக்கு வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, வெங்கடேசனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, சிவசங்கரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
