/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையின் குறுகே மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
சாலையின் குறுகே மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுகே மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுகே மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 22, 2024 01:04 AM
திருக்கனுார்: செல்லிப்பட்டில் மழையின் காரணமாக புளிய மரத்தின் மெகா சைஸ் கிளை உடைந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பத்துக்கண்ணு வழியாக வில்லியனுார் , மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் 50க்கும் மேற்பட்ட பழமையான புளிய மரங்கள் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக, செல்லிப்பட்டு மெயின் ரோடு அருகே இருந்த பழமையான புளியமரத்தின் மெகா சைஸ் கிளை ஒன்று நேற்று காலை 8:00 மணி அளவில் திடீரென உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
தகவலறிந்த பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் திருக்கனுார் போலீசார் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

