/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிஷன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் வாலிபர் பலி

ADDED : ஏப் 15, 2024 04:39 AM

புதுச்சேரி : மிஷன் வீதியில் பொதுப்பணித்துறை தோண்டிய பள்ளத்தின் சிமென்ட் சிலாப் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்தியால்பேட்டை, வ.உ.சி. நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 33; கிராபிக் டிசைனர். திருமணம் ஆகவில்லை.
நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி நகர பகுதிக்கு வந்த வெங்கடேசன், தனது யமாகா எப். இசட் பைக்கில் மீண்டும் வீடு திரும்பினார்.
நள்ளிரவு 2:00 மணிக்கு மிஷன் வீதி வழியாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சென்றார். கல்வே கல்லுாரி அருகே காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் சாலையின் குறுக்கே கழிவுநீர் மற்றும் வடிகால் வாய்க்கால் பணிக்காக அதன் மீது இருந்த சிலாப்புகள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. சாலை மூடப்படவில்லை. அப்பகுதியில் மின் விளக்குகளும் எரியாமல் இருண்டு கிடந்தது.
இந்நிலையில், பைக்கில் வந்த வெங்கடேசன், சாலையில் கிடந்த சிளாப் கற்கள் மீது மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார், வெங்கடேசன் தானே கிழே விழுந்து உயிரிழந்ததாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.