தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து

தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து

தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து


ADDED : ஆக 23, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை அருகே மாத்திரைகள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

திருபுவனை அடுத்த திருபுவனைபாளையத்தில் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று மாலை 3:30 மணியளவில் இந்த கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வீசியதால், தீ மளமளவென பரவியது.

தகவலின்பேரில் திருபுவனை, மடுகரை, திருக்கனுார், மற்றும் வில்லியனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புடைய மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us