/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
13 வயது சிறுவன் துறவறம் செல்ல ஊர்வலம்
/
13 வயது சிறுவன் துறவறம் செல்ல ஊர்வலம்
ADDED : ஏப் 15, 2024 01:27 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் வசிக்கும் ஜெயின் சமூக சிறுவன் துறவறம் செல்ல ஊர்வலமாக சென்றார்.
புதுச்சேரியில் ஜெயின் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இளையோர் தங்கள் சமூக கருத்துகளை பின்பற்றி துறவறம் பின்பற்றும் வைபங்களும் இங்கு நடப்பது வழக்கம். இந்தநிலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் விகாஷ் சம்தர்யா, பிரியகா சம்தர்யா தம்பதி 40 ஆண்டுகளுக்கு முன்பாக புதுச்சேரிக்கு குடிபெயர்ந்தனர்.
இவர்களின் இளைய மகன் ஹார்திக் 13, துறவறம் பூண முன்வந்ததை இக்குடும்பத்தினர் ஏற்றனர். அதையடுத்து புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சாராட்டு வண்டியில் ஹார்திக் தனது சகோதரியுடன் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
ஊர்வலமானது புதுச்சேரி காமராஜர் சாலை, அண்ணாசாலை, செட்டி தெருவில் உள்ள திகம்பரர் கோவிலை அடைந்து பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அகமதாபாத் புறப்பட்டு செல்லும் இவர்கள், அங்குள்ள புகழ்பெற்ற ஜெயின் கோவிலில் துறவற பூஜையில் பங்கேற்று ஹார்திக்கு தீட்சிதை அளிக்கப்படும் என ஜெயின் சமூகத்தினர் தெரிவித்தனர்.

