/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்; விசாரணை நடத்த கோரிக்கை
/
9ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்; விசாரணை நடத்த கோரிக்கை
9ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்; விசாரணை நடத்த கோரிக்கை
9ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்; விசாரணை நடத்த கோரிக்கை
ADDED : மே 18, 2024 06:31 AM

புதுச்சேரி: ஒன்பதாம் வகுப்பு மாணவர் தேர்ச்சி சதவீதம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமியை சந்தித்து அளித்த மனு:
புதுச்சேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுகின்றன. 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களை சரியாக படிக்கவில்லை என்று காரணம் கூறி, பெற்றோர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி மாற்று சான்றிதழ் வழங்கி, வேறு பள்ளியில் சேர வற்புறுத்தப்படுகிறது.
இது குறித்து கடந்த மார்ச் மாதம் முதல்வர், பள்ளிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒன்பதாம் வகுப்பு தோல்வி அடைந்ததாக மாற்றுச் சான்று அளித்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவது தொடர்கிறது.
எனவே, முதல்வர் மற்றும் கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தேர்ச்சி சதவீதம் குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

