/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 99.5 டிகிரி வெயில்
/
புதுச்சேரியில் 99.5 டிகிரி வெயில்
ADDED : செப் 14, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 99.5 டிகிரி வெயில் பதிவானது.
புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறான காலநிலை பதிவாகி வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் வெயில் அதிகம் பதிவாகும். அதன்பின்பு வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் கோடை காலத்திற்கு பிறகும் வெயில் உக்கிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
நேற்று காலை முதல் கடும் வெயில் நிலவியது. பகல் நேரத்தில் சிக்னல்களில் 2 நிமிடம் கூட நிற்க முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வெயில் தாக்கத்தால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. நேற்றைய வெயில் 99.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது.

