/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நேற்று 8 பேர் மனு தாக்கல்
/
புதுச்சேரியில் நேற்று 8 பேர் மனு தாக்கல்
ADDED : மார் 27, 2024 07:31 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் பி.எஸ்.பி., சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 8 பேர் மனுதாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரி லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது
நேற்றுமுன் தினம் (25ம் தேதி) பா.ஜ., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 8 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அலங்காரவேலு கலெக்டரிடம் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் மணிகண்டன், கிஷோர்குமார், கிருஷ்ணமூர்த்தி, அருணாச்சலம், நிர்மலா, கொளஞ்சியப்பன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் நேற்று முன்தினம் திரும்பி சென்ற ராமதாஸ்,வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மொத்தம் 8 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 17 வேட்பாளர்கள் சார்பில் 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாளான இன்று 27 ம்தேதி 11 மணியளவில் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக வந்து தாக்கல் செய்ய உள்ளார். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.இந்த வேட்பு மனுக்கள் மீது 28 ம்தேதி பரிசீலனை நடக்கின்றது.வேட்பு மனுக்களை திரும்ப பெற 30 ம்தேதி இறுதி காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

