/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள்
/
பண பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள்
ADDED : ஏப் 12, 2024 04:31 AM
புதுச்சேரி : தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
லாஸ்பேட்டை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடந்து வரும் வேட்பாளர் பட்டியல் சின்னம் பதிக்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:
புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பிற்கான துணை ராணுவ படையின் 10 கம்பெனிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதுவரை 6 கம்பெனிகள் வந்துள்ளன.இன்னும் 4 கம்பெனிகள் வர உள்ளன.அவர்கள் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதுச்சேரியில் 232 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.இங்கு துணை ராணுவ படையும்,வெப் காமிராக்கள் பொருத்தியும் கண்காணிப்பு நடக்க உள்ளது,
வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதைத தடுக்க தேர்தல் பறக்கும் படை எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம். கடைசி 5 நாட்களில் 48 பறக்கும் படைகள் கூடுதலாக ஏற்படுத்த உள்ளோம். இதன் பறக்கும் படைகளில் எண்ணிக்கை 60 ஆக உயரும்.
இதுவரை பறக்கும் படை 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.முறையான ஆவணங்களை சமர்பித்ததால் அவற்றை திரும்பகொடுத்துள்ளோம்.
பிரசாரத்தில் அதிக வாகனங்கள் பயன்படுத்தினால், அவை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் வாகனங்கள் உறுதியானால் நோட்டீஸ் அனுப்பப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அதிகாரபூர்வமாக தகவல்கள் ஏதும் வரவில்லை. அதை தடுக்கவே கூடுதலாக பறக்கும் படைகளை அதிகரிக்க உள்ளோம். தேர்தல் விதிமுறைகள் சிவிஜில் செயலில் புகார்கள் ஏதும் வரவில்லை.வில்லியனுார் நடந்த சோதனை வருமான வரித் துறை நடத்தியுள்ளது.
இதனை தேர்தல் துறை நடத்தவில்லை.அது பற்றிய விபரங்கள் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

