/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 20, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைகேட்பு முகாம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.
சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு, (வருவாய்), அர்ஜூன் ராமகிருஷ்ணன்,எஸ்.பி., வீரவல்லபன், மாவட்ட பதிவாளர் தயாளன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில், பொதுமக்களிடம் இருந்து 142 மனுக்கள் பெறப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க்கப்பட்டு, துறை வாரியாக அந்த மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

