/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
கோவில் திருப்பணிக்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : ஏப் 24, 2024 08:45 AM

வில்லியனுார், : ஒதியம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் தொகுதி ஒதியம்பட்டில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து திருப்பணிக்காக தனது சொந்த பணம் ஒரு லட்சத்தை ஆலய நிர்வாகிகளிடம் சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாக அதிகாரி பர்குணன், ஊர் முக்கியஸ்தர்கள் மாரிமுத்து, திருவேங்கடம், பெருமாள், அரிகிருஷ்ணன், பாலு, குலசேகரன், தி.மு.க., நிர்வாகிகள் இளஞ்செழியபாண்டியன், மணிகண்டன், ரமணன், ஆனந்து, இரணியன், வேலவன், காத்தவராயன், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

