ADDED : செப் 14, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் தனியாக இருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற பிளம்பரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் வீட்டில் திருநள்ளாறு தேனுார் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த ராஜூகண்ணன், 28; பிளம்பிங் வேலை செய்துகொண்டிருந்தார்.
அந்த வீட்டில் உள்ள பெண் தனியாக இருப்பதை அறிந்து பிளம்பர் ,பெண் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளார்.அப் பெண் கதவை திறந்தவுடன் உள்ளே புகுந்த ராஜுகண்ணன் பெண்ணின் வாயை பொத்தி , இரும்பு பைப்பை காட்டி மிரட்டி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அப்பெண் அவரை தள்ளிவிட்டு கூச்சலிடவே பிளம்பர் ராஜூகண்ணன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் ராஜூகண்ணன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

