/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால்களை துார் வார வேண்டும் ஓம் சக்தி சேகர் கோரிக்கை
/
வாய்க்கால்களை துார் வார வேண்டும் ஓம் சக்தி சேகர் கோரிக்கை
வாய்க்கால்களை துார் வார வேண்டும் ஓம் சக்தி சேகர் கோரிக்கை
வாய்க்கால்களை துார் வார வேண்டும் ஓம் சக்தி சேகர் கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 07:20 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மழைக்காலத்திற்கு முன், பிரதான வாய்க்கால்கள் முறையாக துார் வாரப்பட வேண்டும் என, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் ரங்கசாமி ,அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரிடம் அளித்த மனு:
நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட, சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள, வாய்க்கால் நீண்ட நாட்களாக துார் வாரப்படாத காரணத்தால், மழைக்காலங்களில் சக்தி நகர், சத்யா நகர், வேல்முருகன் நகர், டி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்தது.
மழைக்காலத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறை மூலம், சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகே உள்ள வாய்க்கால் கல்வெட்டின் வழியாக அதிகபட்ச மழைநீர், எதிரே உள்ள அய்யனார் கோவில் வாய்க்கால் வழியாக வருவதால், நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
அதனால் மருத்துவமனை அருகே உள்ள கல்வெட்டு வழியாக வரும் தண்ணீரை, புதிய வாய்க்கால் மூலம் இந்திராகாந்தி சிக்னல் வழியாக அண்ணாநகர் வீட்டு வசதி வாரியம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய கால்வாயில் இணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

