/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 20, 2024 04:41 AM
பாகூர், மூர்த்திக்குப்பம் சிவசக்தி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பாகூர் அடுத்த மூர்த்திக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசிவசக்தி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் கும்பாபிேஷக விழா கடந்த 11ம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு முளைப்பாறி நிகழ்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து, 18ம் தேதி காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனை, கணபதி ேஹாம், மாலை 4.00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், கும்பஸ்தாபனம், மாலை 6.00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, கலச பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 5.00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மகாலட்சுமி ேஹாமம், நவகிரக ேஹாமம், ருத்ர ேஹாமம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு விநாயகர், சிவசக்தி முத்துமாரியம்மன், முருகர், நவகிரக பரிவார சுவாமிகளின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

