/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேம்பாட்டு பணிகள்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மேம்பாட்டு பணிகள்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 10, 2024 12:34 AM

பாகூர் : பாகூர் தொகுதியில் 36 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் தொகுதிக்குட்பட்ட பெரிய ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில், குடிநீர் குழாய் அமைத்திடவும், பரிக்கல்பட்டு பேட் பகுதிக்கு, 7 லட்சத்து 69 ஆயிரத்து 270 ரூபாய் செலவில் தகன கொட்டகை அமைக்கவும், கன்னியக்கோவில் திருமலைவாசன் நகர், தண்டபாணி நகர், சாய்தேவி நகர், ரத்னா அவென்யூ, சுப்ரமணி நகர் பகுதியில் 26 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

