திருச்சி கிழக்கில் விஜய் போட்டி சாதகமான தொகுதி பட்டியலில் முதலிடம்
திருச்சி கிழக்கில் விஜய் போட்டி சாதகமான தொகுதி பட்டியலில் முதலிடம்
ADDED : செப் 11, 2025 04:22 AM

சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கான தொகுதியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு உட்பட 15 தொகுதிகள், விஜய் போட்டியிடுவதற்கு சாதகமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஆதி திராவிடர், கிறிஸ்துவர், முஸ்லிம், வெள்ளாளர் சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, விஜய் அங்கு போட்டியிட்டால், வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாக 'சர்வே'யில் தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து, அந்த தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட 50,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட, அமைச்சர் மகேஷ் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதி தற்போதே முக்கியத்துவம் பெற துவங்கி உள்ளது.