UPDATED : டிச 22, 2025 11:21 AM
ADDED : டிச 22, 2025 07:59 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் ஊராட்சி, பனங்காடு பகுதியில் வசித்து வரும், 30, வயது பெண் குமுறல்: நான், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியிடம் வளர்ந்தேன். தற்போது திருமணமாகி விட்டது. நான் குடியிருந்து வந்த பெற்றோர் இடத் தின் பட்டாவை, எனது பெயருக்கு மாற்ற வேண்டும் என, பெருமாநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றேன்.
அங்கிருந்த உதவியாளர், 'பெற்றோர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டும்' என்றார்; என்னிடம் இல்லை. அதனால், விண்ணப்பிக்கு மாறு கூறி அதற்கான வழிமுறைகளையும் அவரே தெரிவித்தார். கடந்த 2024ல், உரிய ஆதார ஆவணங் களுடன் பெற்றோர் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். பல நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை. வி.ஏ.ஓ., ஆபீ சுக்கு நேரில் சென்று விசாரித்தேன்.
அங்கிருந்த ஒருவர், 'நீங்கள், 30 ஆண்டுகள் கழித்து பெற்றோர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்கிறீர்கள்; இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சான்று கொடுப்பது சிரமம். 'ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் 30 வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். மேலே உள்ளவர் களுக்கும் தர வேண்டும்' என்றார்.
கூலி வேலை
'அய்யா... நானும், என்னோட கணவரும் கூலி வேலைக்குத்தான் போறோம்; எங்களால இவ்ளோ பணம் கொடுக்க முடியாது' என்றுகூறி கண்ணீர்மல்க முறையிட்டேன்; அவரது மனம்
இரங்கவில்லை. திரும்பி வந்துவிட்டேன். பின்னர் மீண்டும் சென்றபோது, 'நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இல்லை' என்றனர்.
இப்படியே பல முறை அலைந்தும் பலனில்லை. கடைசியாக ஒரு புரோக்கர் தொலைபேசி நம்பரை கொடுத்து பேசுமாறு கூறினார். அவர், அவிநாசியைச் சேர்ந்தவர். அவரிடம் பேசியபோது, '30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் காரியம் கச்சித மாக முடியும்' என்றார். வேறு வழி?
வட்டிக்கு கடன் பெற்று 30 ஆயிரம் கொடுத்தேன். புரோக்கர் மூலம் சான்றி தழ்கள் கிடைத்தன. ஆனால், இன் னும் இடத்திற்கான பட்டா மாறுதல் வரவில்லை. அது எப்போது கிடைக் குமோ தெரியவில்லை. அப்பாவிகளை அலையவிடும் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்குமே வெளிச்சம்!
தொடரும்...

