sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்

/

ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்

ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்

ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்


UPDATED : மார் 11, 2024 05:04 AM

ADDED : மார் 11, 2024 04:55 AM

Google News

UPDATED : மார் 11, 2024 05:04 AM ADDED : மார் 11, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடந்தது.

துணை பொதுச்செயலர் கனிமொழி உள்ளிட்ட பலர் நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலுக்கு வந்த தற்போதைய எம்.பி.,க்களிடம், தொகுதிக்கு செய்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

போட்டியிட புதிதாக விருப்ப மனு அளித்தவர்களிடம், 'எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறீர்கள், பங்கேற்ற போராட்டங்கள் எத்தனை, சிறை சென்றதுண்டா, கட்சிக்காக ஆற்றிய பணிகள் என்ன, கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், தொகுதிக்கு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள், எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்' என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.

நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கிய நேர்காணல், மதியம், 2:00 மணிக்கு நிறைவு பெற்றது. நேர்காணலில் அந்தந்த லோக்சபா தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மட்டும் பங்கேற்றனர். விருப்ப மனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரவில்லை.

விருப்ப மனு கொடுத்திருந்த நிர்வாகிகள், நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சற்று நேரம் பேசலாம்; தங்களை கருத்தை கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற, ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், கூட்டமாக, கொத்தாக அமர வைத்து, நேர்காணலை முடித்ததால், அதிருப்தி அடைந்து, வெளியில் வந்து தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

தி.மு.க.,வில் வழக்கமாக நேர்காணல், இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும். ஆனால், இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை தயாரித்து விட்டதால், ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

'நாற்பதிலும் நானே வேட்பாளர்'


முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:பிரதமர் மோடி, மாநிலம், மாநிலமாக சென்று திட்டங்களை துவக்கி வருகிறார். அவரது பதற்றமானது, அவர்கள் முகத்தில் இருக்கும் பயத்தை காட்டுகிறது. மீண்டும் மோடி என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் இட்டாலும், வேண்டாம் மோடி என்பதே, இந்தியா முழுதும் ஒலிக்கிறது.தமிழகத்தில், இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
நாங்கள் கொடுத்தோம்; அவர்கள் பெற்றார்கள் என்றில்லாமல், அனைவரும் அமர்ந்து பேசி, தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம் என்பதே உண்மை. எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த ஒற்றுமை உணர்வு, 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத் தரும். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால், கூட்டணியும் மாறாது என்பதை நிரூபித்து வருகிறாம்.
இதையே இண்டியா கூட்டணியின் துவக்கக்கூட்டத்திலும் நான் வலியுறுத்தினேன். அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்துள்ளது. புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும் வெற்றிக்கு தி.மு.க.,வினர் பாடுபட வேண்டும்; 40 தொகுதிகளிலும், வேட்பாளர் ஸ்டாலின் என்பதை மனதில் வைத்து, அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ஏற்கனவே முடிச்சிட்டோம்!


வேட்பாளர்கள் நேர்காணலுக்கு முன், லோக்சபா தொகுதிகளில் உள்ளபேரூராட்சி, நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,எம்.எல். ஏ.,க்களை அழைத்து, அவர்களிடம் தேர்தல் கள ஆய்வு நடத்தினோம்.
அக்கூட்டத்திற்கு, சிட்டிங் எம்.பி.,க்களை மட்டும் அழைக்கவில்லை. இந்த ஆய்வுக் கூட்டம் எட்டு நாட்கள் நடந்தது. அதில் 2,000 பேர் பங்கேற்றனர். அப்போது, எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு என்பதை, முழு அறிக்கையாக தயாரித்து, முதல்வரிடம் வழங்கி விட்டோம். எனவே, நேர்காணலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் முக்கிய கேள்விகளை மட்டும் கேட்டோம்.
மற்ற நிர்வாகிகளை அழைக்கவில்லை என்பதால், அதிக நேரமும் எடுக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை நாங்கள் கணித்து வைத்திருந்தால், அந்தந்த தொகுதிகளின்நிர்வாகிகளிடம், சில கேள்விகளை மட்டும் கேட்டு அனுப்பி விட்டோம்.

- ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., அமைப்புச் செயலர்.








      Dinamalar
      Follow us