தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/ பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு

பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு

பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு


ADDED : ஜூலை 09, 2025 11:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 11:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஆந்திராவில், ஜன சேனா கட்சி துவங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தொடர்ந்து 10 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டார். ஆனால், தோல்வியே மிஞ்சியது.

கடந்த 2024 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். இத்தேர்தலில், ஜன சேனா போட்டியிட்ட 21 சட்டசபை தொகுதிகள், இரண்டு லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றது. பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகி உள்ளார். அவருடைய தனித்து போட்டியிடும் முடிவுக்கு தடை போட்டது, கட்சிக்காக நியமிக்கப்பட்ட வியூக வகுப்பாளர் தான்.

சமீபத்தில், தமிழகத்தில் இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் பவன் கல்யாண். அதில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கருத்தரங்கும் ஒன்று. அக்கருத்தரங்கில் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்த பேச்சின் பின்னணியில் வியூக வகுப்பாளர் அறிவுரையே இருக்கிறது என்பதை அறிந்த அ.தி.மு.க., தரப்பு, தங்களுக்காக தமிழகம் வந்து செயல்பட அவரை அணுகியது.

அவரும் ஒப்புக்கொள்ள, அவர் தன் டீம் வாயிலாக அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறார். அவர் வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையிலேயே, தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே, 'பஸ் யாத்ரா' சுற்றுப் பயணத்தைத் பழனிசாமி துவங்கி, மக்களை சந்தித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us