sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஸ்ரீ சத்ய சாயி காட்டிய வழியில் வாழ்வை மாற்றியமைப்போம்!

/

ஸ்ரீ சத்ய சாயி காட்டிய வழியில் வாழ்வை மாற்றியமைப்போம்!

ஸ்ரீ சத்ய சாயி காட்டிய வழியில் வாழ்வை மாற்றியமைப்போம்!

ஸ்ரீ சத்ய சாயி காட்டிய வழியில் வாழ்வை மாற்றியமைப்போம்!


UPDATED : நவ 23, 2024 10:09 AM

ADDED : நவ 23, 2024 09:52 AM

Google News

UPDATED : நவ 23, 2024 10:09 AM ADDED : நவ 23, 2024 09:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனதில் நேர்மை இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும் நடத்தையில் அழகு மிளிர்ந்தால், இல்லத்தில் இணக்கம் கைகூடும், இல்லத்தில் இணக்கம் கைகூடினால், தேசத்தில் ஒழுங்கு நிலவும் தேசத்தில் ஒழுங்கு நிலவினால், உலகத்தில் அமைதி உண்டாகும்.

இவை பசுவான சத்ய பாபாவின் உதடுகள் உச்சரித்த வாரித்தைகள்.



2007ம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளு மன்றத்தில் பேருரை நிகழ்த்திய அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம் அருள்வாக்கை பிரதிபலித்த போது அரங்கமே சுரவொலி எழுப்பி ஆமோதித்தது. பசுவான் சத்ய சாயி போதனைகள் இந்த பூவுலகில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட இது ஒரு சின்னஞசிறு சாட்சியம் மட்டுமே.

தென்னிந்தியாவின் புட்டபர்த்தி எனும் சிற்றுாரில் ஒரு சிறு இல்லத்தில் சத்ய நாராயண ராஜு எனும் பெயரில் அவதரித்த பசுவான சத்ய சாயி இன்று உலகம் முழுதம் பரவிக் கிடக்கும் கோடானு கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் மனக்கவலைகளுக்கு மருந்தளிக்கும் மகானாக விளங்குகிறார்.

பகுத்தறிவுவாதிகளும் பாபாவை அற்புதமான ஒரு மனிதநேயராக மதிக்கிறார்கள். ஆன்மிகத் தேடலில் மூழ்கிக் கிடக்கும் மற்றவர்களுக்கும் சாயி மிஷன் சமுத்திரத்தில் ஒரு துளியாக கலந்து விட்டவர்களுக்கும் அவர் குருவாக தெய்வீக தலைவராக, ஓர் அவதாரமாக காட்சியளிக்கிறார்.

சுதந்திரத்துக்கு காத்திருந்த இந்திய தேசத்தில் 1908ம் ஆண்டு, புட்டபர்த்தியில் இறை நம்பிக்கையில் திளைத்திருந்த ராஜு வம்சத்தில், பெத்த வெங்கம் ராஜுவுக்கும், மதி ஈஸ்வரம்மாவுக்கும் மகனாக புனிதமான ஒரு திங்கட்கிழமையில் நவம்பர் 23 அவதரித்த சிசுவுக்கு சத்ய நாராயண ராஜு என பெயர் சூட்டினர் பெற்றோர்.

அந்தக் குழந்தை 14 ஆவது வயதை எட்டியதுமே, தன்னை சாயி பாபா என்று பிராடனம் செய்து, தான் இப்பூமியில் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை ஒன்று இருப்பதாக அறிவித்தார். உன்னதமான அவருடைய யாத்திரையின் துவக்கம் அதுவே.

நான் செய்யவிருக்கும் பணி என்னவென்றால், மனிதகுலத்தில் அன்பை பயிரிட்டு, அனைவரின் வாழ்விலும் ஆனந்தத்தை நிறைப்பது தான். நேர்வழியில் இருந்து விலகிச் சென்றவர்களின் கரம்பிடித்து அவர்களை மீண்டும் நல்வழிக்கு அழைத்து வந்து ரட்சிக்க நான் உறுதி கொள்கிறேன் 'எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சேவையில் என்னை ஐக்கியமாக்கில் கொள்ள ஆசை கொண்டிருக்கிறேன். அதாவது. ஏழைகளை துன்பத்தில் இருந்து விடுவித்து, அவர்களிடம் இல்லாததை எல்லாம் முழுமையாக வழங்குவதற்கு சங்கல்பம் செய்கிறேன் என்பதே பாபாவின் பிராடனம். பாறைக்குன்றுகள் நிறைந்த புட்டபர்த்தியின் அடிவாரத்தில் எழுந்த பிரசாந்தி நிலையம், பாபாவின் பாதங்கள் பட்டதால், பரிபூரன நிம்மதியின் உறைவிடமாக நிகழ்கிறது.

ஆன்மிகப்புத்தெழுச்சியின் மற்றாக விளங்குகிறது. ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதற்காக மிகச் சிறிய அளவியே 1950களில் அங்கே துவங்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கின்ற மாபெரும் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் வரையிலும், சத்ய சாயி மத்திய அறக்கட்டளை சத்ய சாயி சேவா நிலையங்கள் வழியாகக்கப்படும்

அனைத்து நிறுவனங்களும், பாபாவின் உலகளாவிய அன்புக்கும் தன்னலமற்ற சேவைக்கும் அடையாளச் சின்னங்களாக ஜொலிக்கின்றன. அவை அனைத்தின் அடிநாதமாக வீற்றிருப்பது பாபாவின் ஆதார லட்சியமான, சுய சீர்திருத்தம் அதன் மூலமே மனிதர்கள் மேம்பட்ட மானுடர்களாக மாற இயலும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணர்ந்து, தவறுகளை களைந்து, நற்பண்புகளை சுவீகரித்து முழுமையாக சீர்திருத்திக் கொள்வதன் வழியாகவே சத்தியம்.

சமாதானம் நேர்மை, நேசம் அகிம்சை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று பாபா அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தினார். அந்த போதனைகள் எட்டுத் திசையிலும் எதிரொலித்ததன் விளைவாக பிரசாந்தி நிலையத்தில் உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் வெவ்வேறு கலாசார மொழி. மத பின்னணி கொண்ட மக்கள் எவலோரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைசு கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்த பூர்ணிமா, சீனப் புத்தாண்டு போன்ற அனைத்து பண்டிகைகளும் பிரசாந்தி நிலையத்தின் காலண்டரில் தவறாமல் இடம் பிடிக்கின்றன. பாபா அந்த உண்மையை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

நீங்கள் பின்பற்றும் இறை வழியில் இருந்து மாறுங்கள் என்று சொல்ல மாட்டேன். உங்கள் கடவுளை கைவிட்டு வேறொரு கடவுளை கும்பிடுங்கள் என்று சொல்லமாட்டேன். நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், நல்ல கிறிஸ்தவராக இருங்கள்; நீங்கள் இந்துவாக இருந்தால் நல்ல இந்துவாக இருங்கள் நீங்கள் முஸ்லிமாக இருந்தால், நல்ல முஸ்லிமாக இருங்கள் என்று தான் சொல்கிறேன்

'உலகத்தில் ஒரே ஒரு ஜாதி நான் உண்டு மனித ஜாதி. ஒரே மதம் தான் உண்டு அன்பு என்ற மதம், ஒரே மொழி நாள் உண்டு. இதயத்தின் மொழி' பாபா தனது சீடர்களை அளபின் வடிவமாகவே பார்த்தார். அவ்வாறே அழைத்தார்.

அவருடைய ஸ்பரிசத்தால் ஆசிர்வதியப்பட்ட ஒவ்வொரு மனிதரும் இந்த பூமியை சொர்க்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முன்வருவது கண்கூடாக பார்க்க முடிகிறது. பாபாவின் ஆசி பெற்ற அந்த புனிதப் பயணம் முடிவில்லாதது- அன்பின் விதைகளை உங்கள் இதயத்தில் நட்டு வைத்தால், அது செடியாக மரமாக பெரும் விருட்சமாக வளர்ந்து அன்பையும் ஆனந்தத்தையும் அனைவருக்கும் வாரி வழங்கும் அதிசயத்தை நீங்கள் காணலாம்' என்பது பாபா உபதேசித்த மந்திரம். ஸ்ரீ சத்ய சாயி மிஷன் அந்த வழியில் தொடர்ந்து பயணிக்க உறுதி பூண்டுள்ளது.






      Dinamalar
      Follow us