UPDATED : ஜன 23, 2024 04:55 PM
ADDED : ஜன 23, 2024 06:37 AM

பல்லாயிரக்கணக்கானோரின் தொலைநோக்கு பார்வையும், முயற்சியும், தியாகமும் உள்ளது. அவர்களில் முக்கியமானவர்களை இங்கு நினைவுகூர்கிறோம்.
கரசேவகர்கள் உறுதி
ராமர் கோவில் கட்டப்பட்டதில் கரசேவகர்கள் பங்கு அதிகம். கடந்த 1992, டிச., 6ல் நாடு முழுவதும் இருந்து இரண்டரை லட்சம் பேர் அயோத்தியில் குவிந்தனர். உறுதியுடன் திரண்ட இவர்களை, 60,000 மத்திய படை போலீசாரால் தடுக்க முடியவில்லை. திட்டமிட்டபடி எல்லாம் முடிய, அங்கு குவிந்த மண்குவியலையும் அகற்றி சுத்தம் செய்தனர். 'சிங்துவார்' எனப்படும் ராமர் கோவிலுக்கான முதன்மை நுழைவு வாயிலுக்காக கரசேவகர்கள் அடிக்கல் நாட்டினர். தற்போது ராமர் கோவில் பிரமாண்டமாய் உயிர்த்தெழுந்துள்ளது.
அத்வானி ரத யாத்திரை
ராம ஜென்மபூமி மீட்பு போராட்டத்தில் அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானி முக்கிய பங்கு வகித்தார். 2.47 ஏக்கர் சரஇடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி 1990 செப்., 25ல் குஜராத்தின் சோம்நாத் கோவிலில் இருந்து அயோத்திக்கு ராம் ரத யாத்திரையை துவங்கினார். இவரது யாத்திரை பீஹாரில் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்வானி கைது செய்யப்பட்டார். 1.50 லட்சம் தொண்டர்களும் கைதாகினர்.
இந்த யாத்திரை இளைஞர்கள் மத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. அதேபோல அடுத்த சில ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கவும் உதவியது. 1992 டிச., 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நடந்த கரசேவகர்கள் கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருடன் மேடையில் அமர்ந்திருந்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து 2020ல் அத்வானி விடுவிக்கப்பட்டார்.
சொன்னதை செய்தார்
ராமர் கோவில் உருவானதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகிக்கிறார். 1990 ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி நடத்திய ரத யாத்திரையில் பங்கேற்றார். 1991ல் முரளி மனோகர் ஜோஷி அயோத்திக்கு ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இதில் மோடியும் உடன் சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள், 'அடுத்து எப்போது அயோத்தி வருவீர்கள்,' என கேட்டனர். இதற்கு மோடி,' ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருவேன்,' என்றார்.
வாஜ்பாய் அமைத்த அலுவலகம்

பலே பராசரன்

பேராசிரியர் சம்பத் ராய்

கல்யாண் சிங்

வினய் கட்யார்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீராம் பஞ்சு முயற்சி

'சிங்கம்' அசோக் சிங்கால்

* 1990ல் பீஹாரில் ரத யாத்திரை நுழைந்த போது, அத்வானி கைது செய்யப்பட்டார். அப்போது அரசின் தடைகளை மீறி கர சேவைக்காக ஹிந்து இளைஞர்களை திரட்டி அயோத்தி நோக்கிச் சென்றார்.
* 1992ல் மீண்டும் துணிச்சலாக கரசேவா நடத்தினார். நீண்ட போராட்டத்துக்குப் பின் டிச. 6ல் ராமர் கோவில் கட்டுவதற்கான வழி ஏற்பட்டது.
* வாஜ்பாய் பிரதமராக (1998-2004) இருந்த போது, ராமர் கோவில் கட்ட வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் தலைவராக இருந்த அசோக் சிங்கால் உடல்நலக் குறைவு காரணமாக 2015ல் காலமானார்.
உமா பாரதி

சட்டப்போராட்டம்

சிக்கிய ஆதாரம்

அனுமதி

* மூடப்பட்டு இருந்த பாபர் மசூதியை திறக்க வேண்டும் என இக்குழு உறுதியாக இருந்தது.
* 1986, பிப்., 1ல் உள்ளூர் நீதிமன்றம், மசூதியை திறக்க உத்தரவிட்டது. இந்த இடத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதப்பட்ட செங்கல் கொண்டு கட்டடம் கட்ட ராஜிவ் காந்தி அனுமதித்தார்.
30 ஆண்டு கனவு

ஆஷிஷ் கூறுகையில், ''தந்தை சந்திரகாந்த் இளம் பருவத்தில் இருந்தே கோவில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். வாஸ்து சாஸ்திரம், சிற்பக்கலை நுணுக்கங்கள் அறிந்தவர். 1989-ல் ராமர் கோவில் மாதிரியை ஆறு மாதத்தில் வடிவமைத்தார். 1989-ல் ராம் ஜென்ம பூமி வளாகத்துக்கு அப்போதைய வி.எச். பி..தலைவர் அசோக் கிங்கால் என் தந்தையை அழைத்து சென்றார். அப்பகுதி ராணுவ பாதுகாப்பில் இருந்தது. இடத்தை அளப்பதற்கு எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை. கால்களால் அளவு எடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின் அவரது கனவு நனவாகியுள்ளது,''என்றார்.
அயோத்தி ராம் ஜென்ம பூமி வழக்கில், 2.77 ஏக்கர் நிலம் ஹிந்து அமைப்புக்கே சொந்தம். கோவில் கட்டிக்கொள்ளலாம் என 2019 நவ., 9ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. யார் இவர்கள்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நாட்டின் தலைமை நீதித்துறை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர். 2018ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பஞ்சாப், ஹரியானா, கவுகாத்தி உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றி முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். தேசிய குடியுரிமை பதிவு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியவர்
எஸ்.ஏ.பாப்டே
ஷரத் அரவிந்த் பாப்டே என்ற இவர், நவ.,17 தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்றவர். மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2013ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
டி.ஒய்.சந்திரசூட்
நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகனான இவர் 2016ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டார். தனியுரிமை சட்டம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு மும்பை சட்ட பல்கலை மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹாமா சட்ட பல்கலை.,களில் கவுரவ விரிவுரையாளராக உள்ளார்.
அசோக் பூஷண்
1979ல் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக தன் பணியை துவங்கிய இவர், 2001ல் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2016ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
அப்துல் நசீர்
கர்நாடக ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 2003ல் கூடுதல் நீதிபதியாகவும், பின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2017ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான இவர், முத்தலாக் வழக்கில், தனி நபர் உரிமை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்ற கருத்தை கூறினார்.

