/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
மனிதன் சுமக்கும் ஐந்து வகை வெடிகுண்டுகள்!
/
மனிதன் சுமக்கும் ஐந்து வகை வெடிகுண்டுகள்!
PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM

'பிளாக்' என்ற கொலஸ்ட்ரால் கொழுப்புக் கட்டி படிந்து, ரத்தக் குழாய் சுவரை தடிப்பாக்குகிறது. படிப்படியாக, குழாயை அடைக்கிறது. இந்த கட்டி மீது கால்ஷியம் படர்ந்து, கடினமான கட்டியாக உருவாகிறது. இப்படி தான், ரத்த நாளங்களின் உள் சுற்றுச்சுவர் கடினமாகிறது.
இப்படி கடினமாகும் ரத்தக் குழாய்களில், அதிக பாதிப்பை ஏற்படுத்துவது, இதயத்துக்கு ரத்தத்தைச் செலுத்தும் கரோனரி ரத்தக் குழாய்.
பிளாக் கட்டி, முழுமையான அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு ஏற்பட்டு, மரணத்தில் கொண்டு விடுகிறது. இது தான், 'கார்டியாக் அரெஸ்ட்!'
பிளாக், நிரந்தர அடைப்பை உருவாக்கி விடுகிறது. இதிலிருந்து நோயாளியை காப்பாற்றவே, ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் வைக்கப்படுகிறது அல்லது பைபாஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நவீன ஆய்வின்படி இந்த கடினமான கொலஸ்ட்ரால் பிளாக் என்ற கட்டியானது, ஸ்டேட்டின், அஸ்பரின் முதலிய மருந்துகளை நீண்ட காலத்திற்கு உட்கொள்ள வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, ஒபிசிட்டி உள்ளோருக்கு இன்னும் அதிக கொலஸ்ட்ராலை உருவாக்கி விடும்.
மேற்கண்ட பாதிப்புகள் இருந்தால், சிகிச்சை எடுக்காமல் தவிர்க்கக் கூடாது.
பிளாக் கட்டி, இரண்டு வகைப்படும். ஒன்று, கால்ஷியம் படிந்த கடுமையான கட்டி; மற்றொன்று மென்மையான கொலஸ்ட்ரால் கட்டி. மென்மையான கட்டி தான் ஆபத்தானது. உடைந்து வெடித்தால், அதன் மீது தட்டணுக்கள் படிந்து ரத்தக் கட்டியாகி, ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பை உண்டாக்கி விடுகிறது.
இந்தக் கட்டி என்ன காரணங்களால் உடையும்?
மன உளைச்சல், மன வேதனை, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய். இந்த ஐந்தையும், மனித வெடிகுண்டுகள் என்றே கூறலாம்.
இவற்றை எப்படி தடுக்கலாம்?
உணவு முறை மாற்றங்கள் , வாழ்வில் முறையில் மாற்றங்கள். உணவில், பாலிப்பினால் அடங்கிய ஒமேகா 3 அதிகம் உள்ள கடல் உணவுகள், தாவர உணவுகளை உட்கொள்ள வேண்டும்; ஆபத்தான உணவாக கருதப்படுவது. பூரிதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள், மாட்டு மாமிசம்.
ஆபத்தான உணவுகள், ரத்த குழாயின் உட்சுவர்மீது படர்ந்துள்ள எண்டோதீலியத்தை சேதப்படுத்துகின்றன. அதன் பின் பழுதடைந்த இடத்தின் மேல் இந்த கெட்ட கொழுப்பு வகைகளைப் படிய வைத்து, கொழுப்புக் கட்டிகளை உருவாக்கி விடுகின்றன.
வயதுக்கு ஏற்றார்போல் நடைபயிற்சி, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது செய்ய வேண்டும்.
ரத்தப் பரிசோதனையை அடிக்கடி மேற்கொண்டால், 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' என்ற நொதிப் பொருள், ரத்தத்தில் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த அளவை வைத்து, இதய பாதிப்பை ஏற்படும் தீவிரத்தை அறிந்து கொள்ளலாம்.
வெள்ளைப் பூண்டு, வெங்காயம், தர்பூசணி, அவகாடோ ஆகியவற்றில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, ரத்தக் குழாயின் ஆரோக்கியத்தைக் காக் கிறது. கொலஸ்ட்ரால் கட்டி களுக்கு, தகுந்த மருந்து எடுத்துக் கொண்டு, உணவையும் கட்டுப்பாட்டில் வைத்தால், மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்
- பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரி - .
ஊடுருவல் இதய நோய் நிபுணர், எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக், ராயப்பேட்டை, சென்னை - 14. .