ADDED : ஏப் 02, 2024 06:34 AM

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
பா.ஜ தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழக மீனவர்களை இலங்கை சிறை பிடிக்கவில்லையா? அப்போதும் பல்வேறு தமிழக கட்சிகள் பா.ஜ.,வுடன் கூட்டணியில் தான் இருந்தன.
நரேந்திர மோடி பிரதமராக உள்ள 2014 முதல் தமிழக மீனவர்களை இலங்கை சிறை பிடிக்க வில்லையா? 50 ஆண்டுகளாக இது நடந்து கொண்டு தான் உள்ளது.
இலங்கை மீனவர்களை நாமும் சிறை பிடித்து வருகிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கையுடன் பேசி நம் மீனவர்களை விடுவித்து வருகின்றனர்.
வெளியுறவு துறை அதிகாரியாக, செயலராக , அமைச்சராக ஜெய்சங்கர் இருந்த போதும் இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி இருக்கையில் காங்கிரசையும், திமுகவையும் திடீரென ஜெய்சங்கர் குறை கூறுவது ஆச்சிரியமாக உள்ளது.
கடந்த 2015 ஜனவரி 27 ல் வழங்கப்பட்ட ஆர்.டி.ஐ., பதிலில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக் கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
-நமது சிறப்பு நிருபர்-

