sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தமிழக அரசின் மெத்தனத்தால் நிற்குது கோவை-சத்தி பசுமை வழிச்சாலை வேலை!

/

தமிழக அரசின் மெத்தனத்தால் நிற்குது கோவை-சத்தி பசுமை வழிச்சாலை வேலை!

தமிழக அரசின் மெத்தனத்தால் நிற்குது கோவை-சத்தி பசுமை வழிச்சாலை வேலை!

தமிழக அரசின் மெத்தனத்தால் நிற்குது கோவை-சத்தி பசுமை வழிச்சாலை வேலை!


UPDATED : ஏப் 03, 2024 04:31 AM

ADDED : ஏப் 02, 2024 10:52 PM

Google News

UPDATED : ஏப் 03, 2024 04:31 AM ADDED : ஏப் 02, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமாய் சவால் விடலாம்...கோவை, சத்தி ரோட்டில் கணபதி, சரவணம்பட்டியைத் தாண்டி, குரும்பபாளையம் போவதற்குள், ஈச்சனாரியிலிருந்து பொள்ளாச்சிக்கு இருமுறை போய், வந்து விடலாம்.

இத்தனைக்கும் இரண்டுமே, ஒரே தேசிய நெடுஞ்சாலை தான். ஆனால் பொள்ளாச்சி சாலை நான்கு வழிச்சாலையாகவுள்ளது; சத்தி ரோடு, இன்றும் இரு வழியாகப் பாதையாகவுள்ளது.

கோவையின் மிக முக்கியமான தகவல் தொழில் நுட்ப மையமாக உருவெடுத்துள்ள கீரணத்தம், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள், மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகள் இந்த ரோட்டில் அமைந்துள்ளன.

திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்துக்கான மிக முக்கியமான வழித்தடமாகவும், இந்த ரோடு அமைந்துள்ளது.

2010லேயே, இந்த தேசிய நெடுஞ்சாலையை (பழைய எண்: 209 புதிய எண்: 948) விரிவாக்கம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கி, தமிழக- கர்நாடகா எல்லை வரை, பழனி, மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, அன்னுார், சத்தி உட்பட 10 நகரங்களில் புறவழிச்சாலையுடன் விரிவாக்கம் செய்ய, மக்கள் கருத்துக் கேட்பும் நடத்தப்பட்டது.

14 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை கோவை-பொள்ளாச்சி வரையுள்ள ரோடு மட்டுமே முழுமையாக நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி-பழனி வரையிலுமான ரோட்டிலும் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. அதைத் தாண்டி வேலை வேகமெடுக்கவில்லை. கோவை - சத்தி ரோட்டில் வேலையே துவங்கவில்லை.

ஏனிந்த புதிய பசுமைச்சாலை?


இடைப்பட்ட இந்த ஆண்டுகளில், கோவை - சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் நுாறு மடங்கு அதிகரித்துள்ளது. பகல் நேரம் முழுவதுமே, ஊர்வலம் போல அணிவகுத்துச் செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டே, மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த ரோட்டை விரிவாக்கம் செய்யாமல், கோவை - சத்தி இடையே புதிய பசுமை வழிச்சாலை அமைக்க முடிவு செய்தது.

மொத்தம் 96 கி.மீ., துாரமுள்ள கோவை-சத்தி ரோடு, பெரும்பாலும் 12லிருந்து 30 மீட்டர் அகலத்தில், இரு வழிப்பாதையாகவுள்ளது. அதை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், நிறைய கட்டடங்களை அகற்ற வேண்டியிருக்கும். அதனால், புதிதாக நிலமெடுத்து 30-45 மீட்டர் அகலத்தில் 92 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழி பசுமைச்சாலை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசமிருந்தாலும், புதிய ரோட்டை அமைக்கும் பணி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில நெடுஞ்சாலைத்துறையின் ஒரு பிரிவாகவுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் நில ஆர்ஜித பிரேரணை, 2021லேயே தயார் செய்யப்பட்டு, அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.

நிலத்துக்கே ரூ.639 கோடி ஒதுக்கீடு!


இந்த ரோடு அமைப்பதற்கு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், அரசு நிலம் 48 ஏக்கர், தனியார் நிலம் 732 ஏக்கர் என மொத்தம், 780 ஏக்கர் நிலம் தேவையென்று பிரேரணை தரப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த மட்டுமே, 351 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. இடையில் கொரோனா காலம் வந்ததால், நிலமெடுப்பு தள்ளிப் போய், மதிப்பீடு பல மடங்கு உயர்ந்தது.

நிலமெடுப்புக்கான நிதியுடன், ரோடு அமைப்பதற்கு ரூ.1345.51 கோடியும், ரோடு அமைப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ரூ.217.41 கோடியுமாக மொத்தம் ரூ.1912.86 கோடி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்பட்டது. பின்பு, மறு மதிப்பீடு செய்து நிலமெடுப்புக்கு 2023 மார்ச் 28ல், ரூ.639.18 கோடி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

கடந்த ஆண்டு மே 22ல், அமைச்சகத்தால் நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. கோவை மாவட்டம் அன்னுார் தாலுகாவில் 12 கிராமங்கள், திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் 2 கிராமங்கள், ஈரோடு மாவட்டம் சத்தி மற்றும் நம்பியூரில் 16 கிராமங்கள் என மொத்தம் 30 கிராமங்களில், இந்த ரோடுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

எப்ப வருவாரோ?


நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே தரப்பட்ட அறிவிக்கை, கொரோனா ஊரடங்கின் காரணமாக காலாவதியாகி விட்டதால், மீண்டும் அறிவிக்கை வெளியிட்டு, நிலமெடுக்க வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு டி.ஆர்.ஓ., மற்றும் நிலமெடுப்புக்கான அலுவலர்களைக் கொண்ட, புதிய யூனிட்டை ஏற்படுத்த வேண்டுமென்று, 2023 மே 25 லேயே, தமிழக நில நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு இப்போது வரை, இதற்கான சிறப்பு டி.ஆர்.ஓ., மற்றும் அலுவலர்களை நியமிக்காமல் தாமதித்து வருகிறது. ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வரும், கோவை - சத்தி பசுமை வழிச்சாலையை, மிக மிக விரைவாக அமைக்க வேண்டியது இரு அரசுகளின் பொறுப்பாகும். அதற்கு முதலில், நிலமெடுப்புப் பணியை, தமிழக அரசு விரைந்து முடித்துத் தர வேண்டும்.

உள்நோக்கம் இருக்கிறது


தற்போதுள்ள சத்தி ரோட்டை விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் தான், புதிய ரோட்டை அமைக்க, மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூவும் தமிழக அரசு, நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் நிலமெடுத்துத் தராமல் தாமதிப்பது, அரசின் நடவடிக்கையில் அரசியல் உள் நோக்கம் இருப்பதையே வெளிப்படுத்துகிறது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., இரு அரசுகளிடமும் வலியுறுத்தி, இத்திட்டத்தை மிக விரைவாக நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும். பசுமை வழிச்சாலையில், தேவைப்படும் மக்கள் சுங்கம் செலுத்தி பயணம் செய்யலாம்.

பொதுப்போக்குவரத்து வாகனங்கள், தற்போதுள்ள ரோட்டில் பயணம் செய்யலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துக்களும் தடுக்கப்படும்.

இதில் தமிழக அரசு செய்யும் ஒவ்வொரு நாள் தாமதமும், கோவை மக்களுக்குச் செய்யும் அப்பட்டமான அநீதியாகும்!

கோவை - சத்தி பசுமை வழிச்சாலை தெரிந்து கொள்ள வேண்டியவை

n தற்போதுள்ள கோவை-சத்தி ரோட்டின் துாரம்-96 கி.மீ.,n புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச்சாலை துாரம்-92 கி.மீ.,(கோவை-30 கி.மீ., திருப்பூர்-3.60 கி.மீ., ஈரோடு-58.62 கி.மீ.,)n வாகனங்களுக்கான வேக வடிவமைப்பு-100 கி.மீ.,n பசுமை வழிச்சாலையின் அகலம்-30 மீட்டர்-50 மீட்டர் (4 வழி)n சத்தி-தமிழக எல்லை வரை (மலைப்பாதை)- 2 வழிப்பாதைn திட்டத்துக்கு மத்திய அரசின் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு-ரூ.1912.86 கோடிn நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு-ரூ.639.18 கோடிn பசுமை வழிச்சாலைக்கு கையகப்படுத்த வேண்டிய நிலம்-780 ஏக்கர்n 3 மாவட்டங்களில் நிலமெடுக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை-30.



நிலமெடுத்து கொடுத்தால் பணி துவங்கும்!

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை - சத்தி பசுமை வழிச்சாலைக்கான நிலமெடுப்புக்கு, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. குரும்பபாளையம் துவங்கி, சத்தியமங்கலம் வரை, 4 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே, ரூ.639 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.இதற்காக ஏற்கனவே தரப்பட்ட நிலமெடுப்பு அறிவிக்கை, ஓராண்டுடன் காலாவதியாகி விட்டதால், மீண்டும் அறிவித்து நிலமெடுக்க வேண்டும். புதிய டி.ஆர்.ஓ.,நியமிக்கப்பட்டு, நிலமெடுத்துக் கொடுத்ததும், ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும்' என்றனர்.நிலமெடுப்புக்கு சிறப்பு டி.ஆர்.ஓ., நியமிப்பதற்கு, ஏற்படும் தாமதம் குறித்துக் கேட்பதற்காக, தமிழக நில நிர்வாக ஆணையர் பழனிசாமியை தொடர்பு கொண்டபோது, அவரிடம் பதில் பெறவே முடியவில்லை.








      Dinamalar
      Follow us