அரசுக்கு அள்ளித்தந்த அட்சய திருதியை: ரூ.500 கோடி கஜானாவில் விழுந்தது
அரசுக்கு அள்ளித்தந்த அட்சய திருதியை: ரூ.500 கோடி கஜானாவில் விழுந்தது
UPDATED : மே 15, 2024 10:51 AM
ADDED : மே 14, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக நகை கடைகளில் தினமும் சராசரியாக, 10,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது.
சுப தினமான அட்சய திருதியை இம்மாதம், 10ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று பலரும் தங்கம் வாங்கினர். இதனால், ஒரே நாளில் தமிழகத்தில், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது.
அதன் மதிப்பு, 16,750 கோடி ரூபாய். தங்கம் மீது, 3 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனையால், ஒரே நாளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் கிடைத்து உள்ளது.

