இங்கிலாந்து பேராசிரியர்கள் ரத்தினம் கல்லுாரிக்கு வருகை
இங்கிலாந்து பேராசிரியர்கள் ரத்தினம் கல்லுாரிக்கு வருகை
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 07:39 AM
கோவை:
ரத்தினம் கல்வி குழுமம், இங்கிலாந்தின் லீட்ஸ் பெக்கெட் பல்கலை பிரதிநிதிகளை தனது வளாகத்தில் வரவேற்றது.
இக்குழுவில் மூத்த விரிவுரையாளர் லிசா ஓகீப், மேற்படிப்பு பாடநெறி இயக்குனர் கேரி கார்ர், உலகளாவிய தொடர்புகள் இயக்குனர் நிக் ஹலாபி, கல்வி தர மேம்பாட்டுத் தலைவர் டொமினிக் ராம்ஸ்டென் ஆகியோர் இடம்பெற்றனர்.
இக்குழுவினர் மற்றும் ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் தலைமை வணிக அதிகாரி நாகராஜ், பேராசிரியர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது. மாணவர் பரிமாற்ற திட்டங்கள், உலகளாவிய அனுபவ முயற்சிகள், கல்வி தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், கலந்துரையாடல் நடந்தது.
இரு கல்வி நிறுவனங்களும் நீண்ட கால கூட்டாண்மைகளை உருவாக்குவதில் தீவிர ஆர்வம் தெரிவித்தன. இதன் வாயிலாக அறிவு பகிர்வு, உலகளாவிய அனுபவங்கள் மற்றும் பண்பாட்டு பரிமாற்ற கற்றல் வாய்ப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, என, தலைமை வணிக அதிகாரி நாகராஜ் தெரிவித்தார்.