UPDATED : மே 07, 2025 12:00 AM
ADDED : மே 07, 2025 11:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் எனும் நிலைகளில், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள், தமிழ், ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த பிப்ரவரியில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கான முடிவுகள், நேற்று, https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

