தேசிய ஏகலைவா திருவிழாவில் தெலங்கானா மாணவர்கள் முதலிடம்
தேசிய ஏகலைவா திருவிழாவில் தெலங்கானா மாணவர்கள் முதலிடம்
UPDATED : டிச 09, 2025 09:16 AM
ADDED : டிச 09, 2025 09:18 AM

ஆந்திரப்பிரதேசம்:
குண்டூர் மாவட்டம் வட்டேஸ்வரில் அமைந்துள்ள கே எல் பல்கலைக்கழகத்தில் 6-வது தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி கலாச்சார, எழுத்தறிவு மற்றும் கலை திருவிழா டிச., 5 அன்று நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியை ஆந்திரப்பிரதேச பழங்குடியினர் நல உறைவிட கல்வி நிலைய சங்கம் மற்றும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் தேசிய பழங்குடியின மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தியது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பதக்க பட்டியலில் தெலங்கானா முதலிடம் பெற்றது; அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் இடம்பிடித்தன. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 1558 பழங்குடியின மாணவர்கள் இத்திருவிழாவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

