தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சோலார் தொழில்நுட்பம்; பல்கலையில் பயிற்சி முகாம்

சோலார் தொழில்நுட்பம்; பல்கலையில் பயிற்சி முகாம்

சோலார் தொழில்நுட்பம்; பல்கலையில் பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 23, 2025 12:00 AM

ADDED : ஏப் 23, 2025 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2025 12:00 AM ADDED : ஏப் 23, 2025 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், விவசாயத்தில், சோலார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் டீன் ரவிராஜ், பயிற்சியைத் துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், இந்திய சூழலுக்கு ஏற்பட, விவசாய சமூகத்துக்கு வேளாண் சூரிய ஒளி மின் தொழில்நுட்பத்தில், புதுமைகளுக்கான தேவை குறித்து விளக்கினார்.

செபா தலைவர் ரகுராஜ் அர்ஜுனன், விவசாயத்தில் சோலார் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்தும், நாடு முழுதும் செயல்படுத்தப்படும் பல்வேறு சூரிய போட்டோவோல்டிக் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

வேளாண் - சூரிய ஒளி மின் அமைப்புகளின் அடிப்படைகள் குறித்தும் விளக்கினார். இங்கிலாந்து டீசைடு பல்கலை பேராசிரியர் செந்திலரசு சுந்தரம், வேளாண் பல்கலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பேராசிரியர் மகேந்திரன் உட்பட ஜெர்மன் சர்வதேச மேம்பாட்டு சங்கம், எர்னஸ்ட் அண்டு யங் குளோபல் நிறுவனம், பசுமை வேலைகளுக்கான திறன் கவுன்சில் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us