UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்குடன், வாசிப்பு இயக்கம் திட்டம் அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வாசிப்பை ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றும் வகையில், கதை சொல்லும் நிகழ்ச்சிகள், வாசிப்புப் போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன.
கல்வியாளர் லெனின்பாரதி கூறுகையில், பாடநுால்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் காட்ட இயலாது. அது ஒரு ஜன்னல் மட்டுமே. பலவிதமான குழந்தைகளுக்கு பல்வேறு அறிமுகங்களையும், முக்கியமான அறிவியல் உண்மைகளையும் விளக்க பயன்படுகிறது. வரலாறு, அறிவியல், மொழி, புவியியல், சமூக அறிவியல் என வயதுக்கேற்ற அடிப்படை அறிவை உருவாக்கும் ஆரம்பப்புள்ளியாக வாசிப்பு செயல்படுகிறது, என்றார்.

