தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.ஜி., கல்லுாரியில் கட்டுமான கருத்தரங்கு

பி.எஸ்.ஜி., கல்லுாரியில் கட்டுமான கருத்தரங்கு

பி.எஸ்.ஜி., கல்லுாரியில் கட்டுமான கருத்தரங்கு


UPDATED : ஜூன் 21, 2026 01:04 PM

ADDED : ஜூன் 21, 2026 01:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 01:04 PM ADDED : ஜூன் 21, 2026 01:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில் 'கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் (ஆர்.சி.எம்.எஸ்.,) என்ற சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கை துவக்கி வைத்த அகமதாபாத், மாருதி இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் நிமேஷ் பட்டேல் ,'நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய தரமான கட்டுமானம், தொழில்நுட்ப புதுமைகள் முக்கியம்,' என்றார்.

அமெரிக்காவின் மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் முகமது எல்கவாடி, இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலை பேராசிரியர் ஹசன் அல் நகீம், கல்லூரி முதல்வர் தைலா உள்ளிட்டோர் நவீன கட்டுமான முறை குறித்து எடுத்துரைத்தனர்.

நவீன கட்டுமானப் பொருட்கள், சோதனை உபகரணங்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us