UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 06:08 PM

சென்னை:
கடந்த 2025 ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 மற்றும் பிளாஸ் 1 அரியர் தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 25) வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவு எண்ணும் பிறந்த தேதியையும் உள்ளீடு செய்வதன் மூலம் மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள தேர்வர்கள் மறுபரிசீலனைக்காக ஜூலை 28 (திங்கள்) மற்றும் ஜூலை 29 (செவ்வாய்) தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அவர்கள், உரிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275/- கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மறுபரிசீலனைக்கான சான்றிதழ் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாக அல்லது தனியாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

