UPDATED : மே 06, 2025 12:00 AM
ADDED : மே 06, 2025 12:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் 2024-2025ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.21 லட்சம் மாணவர்கள், 3,316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக, மே 8ம் தேதியே 12ம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

