sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

/

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து


UPDATED : மார் 14, 2026 12:11 PM

ADDED : மார் 14, 2026 12:14 PM

Google News

UPDATED : மார் 14, 2026 12:11 PM ADDED : மார் 14, 2026 12:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தது. இத்தேர்வுகள் குறித்த உடுமலை மாணவ, மாணவியரின் கருத்துகள்:

கவிசுகன், என்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெதப்பம்பட்டி:
இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் நன்கு படித்திருந்தால் மட்டுமே, பதில் அளிக்க கூடிய வகையில் இருந்தது. பிற இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. தேர்வுக்கு நன்கு தயாராகி இருந்ததால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

மதுஸ்ரீ, வித்யநேத்ரா மேல்நிலைப் பள்ளி,கோமங்கலம்புதுார்:
இயற்பியல் தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள், உள்ளீட்டு வினாக்களாக இருந்தாலும், அவை எழுதும் வகையில் இருந்தன. பதட்டம் இல்லாமல், தேர்வை எளிதாக எழுதினேன்.

சுகன்யா, ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உடுமலை:
இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாவும், மூன்று மதிப்பெண் வினாவும் சற்று கடினமாக இருந்தது. பிற பகுதிகள் எளிமையாக இருந்தது. பள்ளியில் திருப்புதல் தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றிருந்ததால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சதீஷ்குமார், ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப் பள்ளி, உடுமலை:
பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. இருந்த போதும், பள்ளியில் எழுதிய திருப்புதல் தேர்வுகள் நல்ல பயிற்சியாக அமைந்தது. சிறப்பான முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.






      Dinamalar
      Follow us