UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 08:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:
சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் துவக்கப்பள்ளியில், இரண்டு வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டிருந்தன.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
வகுப்பறையை திறந்து வைத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசுகையில், இங்கு மாணவ, மாணவியரே தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியது பாராட்டுக்குரியது; மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். பின்தங்கிய மாணவர்கள் படித்து முன்னேற, பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றை பயன்படுத்தி, படித்து உயர்ந்த நிலையை மாணவர்கள் அடையவேண்டும், என்றார்.

