எந்தவொரு நாடும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது: ஜெய்சங்கர் உறுதி
எந்தவொரு நாடும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது: ஜெய்சங்கர் உறுதி
UPDATED : டிச 21, 2025 08:57 AM
ADDED : டிச 21, 2025 08:58 AM
புனே:
எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், எந்தவொரு நாடும் அனைத்துப் பிரச்சினைகளிலும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புனேயில் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது:
நம்மைப் போன்ற ஒரு பெரிய பொருளாதார நாடு, தொழில்நுட்பத்தில் பின்தங்காமல் இருக்க வேண்டுமானால், கணிசமான அளவு நவீன உற்பத்தித் துறையை உருவாக்க வேண்டும். எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், எந்தவொரு நாடும் அனைத்துப் பிரச்சினைகளிலும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது.
உலகப் பொருளாதாரத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார கொள்கைகள் மாற்றப்பட்டு இருக்கிறது. அதிகார செல்வாக்கு அதிகரித்துள்ளது. வர்த்தகம், எரிசக்தி, ராணுவம், வளங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய சக்திகளால் இனி ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

