புதிய கல்வி கொள்கை அமல் படுத்தவில்லை: சேலம் பெரியார் பல்கலை
புதிய கல்வி கொள்கை அமல் படுத்தவில்லை: சேலம் பெரியார் பல்கலை
UPDATED : பிப் 04, 2025 12:00 AM
ADDED : பிப் 04, 2025 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை பெரியார் பல்கலையில் அமல் படுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் பெரியார் பல்கலையில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 ஆண்டுகள் இளநிலை கல்வி, அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே பிஎச்.டி படிப்புக்கு தகுதியானவர்கள். 4 ஆண்டுகள் இளநிலை கல்வி படித்தாலே புதிய கல்விக் கொள்கைப்படி பிஎச்.டி படிப்பில் சேரலாம் என வெளியான தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

