தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.எல்.ஆர்.ஐ.,க்கு புதிய இயக்குநர்

சி.எல்.ஆர்.ஐ.,க்கு புதிய இயக்குநர்

சி.எல்.ஆர்.ஐ.,க்கு புதிய இயக்குநர்


UPDATED : டிச 01, 2025 07:42 AM

ADDED : டிச 01, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2025 07:42 AM ADDED : டிச 01, 2025 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை கிண்டியில், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ், சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

இதன் விஞ்ஞானிகள், கச்சா தோல், தோல் பதனிடுதல், தோல் பதனிடு தலை கையாளும் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டப்பட்ட தோல் பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சி.எல்.ஆர்.ஐ.,யின் புதிய இயக்குநராக பழனிசாமி தணிகைவேலனை, சி.எஸ்.ஐ.ஆர்., நியமித் துள்ளது. இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

அண்ணா பல்கலையில், தோல் தொழில் நுட்பத்தில், 1997 மற்றும், 1999ல் பி.டெக்., மற்றும் எம்.டெக்., பட்டம் பெற்ற தணிகைவேலன், 2002ல் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை விஞ்ஞானியாக பணியை துவக்கினார்.

பின், நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், தோல் பொருட்கள் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கம் போன்றவற்றில், முக்கிய பங்கு வகித்து ள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us