UPDATED : மே 12, 2025 12:00 AM
ADDED : மே 12, 2025 10:38 AM

சென்னை:
மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்தால் நீட் தேர்வு எளிதாகும் என அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய கருத்து:
மாநில பட்டியலில் இருந்த கல்வி, கடந்த 1976ல், இந்திரா ஆட்சியில்தான் மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதை இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டுவர முடியவில்லை.
இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. நீட் தேர்வை, அ.தி.மு.க.,வும் வேண்டாம் என்றுதான் சொல்கிறது. ஆனாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. தரம் உயர்த்தினால், மாணவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், தங்களை தகுதிபடுத்திக் கொள்வர்.
எதிர்காலத்தில் நீட் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவர். மத்திய அரசு கல்விக்கொள்கை வேண்டாம் எனக்கூறும், தி.மு.க., அரசு கடந்த, 4 ஆண்டுகளில், 252 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அனுமதியை வழங்கிவிட்டு, மத்திய அரசை குறை கூறக்கூடாது.
இவ்வாறு கூறியுள்ளார்.

