ஸ்ரீ ராமச்சந்திரா மற்றும் கொலரடா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ராமச்சந்திரா மற்றும் கொலரடா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 04:38 PM
சென்னை:
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் கொலரடா மாநில பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி மற்றும் ஆய்வு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் பொறியியல், உயிரி மருத்துவம், பொது சுகாதாரம், மருத்துவ நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.ஸ்ரீ ராமச்சந்திரா நிறுவனத்தின் துணை வேந்தர் உமா பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பல்கலைகளும் இணைந்து ஸ்ரீ ராமச்சந்திராவில் படிக்கும் நான்காண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் கொலரடா பல்கலையில் வலைதள கல்வி மூலம் பயிற்சி பெறுகின்றனர். இதன் மூலம் கொலரடா பல்கலையில் உயர் படிப்பு சேர்வதில் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். மேலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆய்வு மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்படும் என்றார்.கொலரடா மநில பல்கலையின் அதிபர் அமி பார்சன்ஸ் பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு பல்கலைகளும் இணைந்து கல்வி வழங்கி இணையாக பட்டங்கள் வழங்க வழி செய்துள்ளது என்றார்.ஸ்ரீ ராமச்சந்திரா நிறுவனத்தின் ஆய்வுத் துறைத் தலைவர் கல்பனா பாலகிருஷ்ணன் பேசுகையில், இரு பல்கலைகளிலும் மாணவர்கள் கல்வி, பயிற்சி பெறவும், ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எல்லா மாணவர்களுக்கும் சமத்துவ கல்வி வழங்கும் வகையில் இந்தியாவின் புதிய கல்வி கொள்கையின்படி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

