குழந்தைகளுக்கு நீங்கள் தான் முன்மாதிரி; கற்றுக்கொடுங்க தினசரி
குழந்தைகளுக்கு நீங்கள் தான் முன்மாதிரி; கற்றுக்கொடுங்க தினசரி
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:01 AM
பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதுடன், மதிப்பெண்களுக்கான அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். மேலும் தோல்வியை சந்திக்கும் தங்களது குழந்தைகளுக்கு ஆறுதலாக இருப்பதுடன், அதிலிருந்து மீண்டு வர, நிச்சயமாக உதவ வேண்டும்.குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்துக்கு அது பயன்படும் படி தொடர் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். மற்றவர்கள் முன், உங்கள் குழந்தைகளின் குறைகளை சுட்டிக் காட்டினால், அது, அவர்களின் மனதை பாதித்து விடும்.குழந்தைகளுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கடின சூழல் கொடுத்த பழக்கப்படுத்துங்கள். அப்போது தான், வாழ்வுக்கான அர்த்தங்கள் பிடிபடும். அவர்களிடம் தோழமையோடு இருப்பது, படிப்பில் கவனம் செலுத்த உதவும்.குழந்தைகளின் வயதுக் கேற்ப பெற்றோர் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனநிலையை அறிந்து செயல்பட பெற்றோர் போதிய அக்கறை செலுத்த வேண்டும்.

