தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/177 சமூக ஊடக கணக்குளை முடக்கியது மத்திய அரசு!

177 சமூக ஊடக கணக்குளை முடக்கியது மத்திய அரசு!

177 சமூக ஊடக கணக்குளை முடக்கியது மத்திய அரசு!


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 177 சமூக ஊடக கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது.விவசாய விளைபொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.இதையடுத்து மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாளை (பிப்.,21) டில்லி நோக்கி பேரணி துவக்க உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 42 எக்ஸ் சமூகவலைதள கணக்குகள், 35 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 14 இன்ஸ்டாகிராம் கணக்குகள் உட்பட 177 சமூக ஊடக கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், பொது ஒழுங்கை பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us