தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லுாரி டிச. 11ல் திறப்பு: தலைமை செயலர் அறிவிப்பு

பள்ளி, கல்லுாரி டிச. 11ல் திறப்பு: தலைமை செயலர் அறிவிப்பு

பள்ளி, கல்லுாரி டிச. 11ல் திறப்பு: தலைமை செயலர் அறிவிப்பு


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை படாளம் ரோடு அண்ணா நகர் ஆறாவது அவின்யூ தி.நகர் தேனாம்பேட்டை வீனஸ் காலனி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார்.அவர் அளித்த பேட்டி: 
சென்னை மாநகராட்சி பகுதியில் நேற்று மதியம் மின் வாரிய அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளது; மின்சாரம் இல்லை என பட்டியல் தயார் செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கரணை காமகோடி நகர் சாய்நகர் உட்பட சில பகுதிகளில் தண்ணீர் உள்ளது. மத்திய குழு வருவது குறித்து இதுவரை தகவல் இல்லை. நேற்று மதியம் நிலவரப்படி 119 தெருக்களில் தண்ணீர் உள்ளது. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.ஒரு சில பகுதி தவிர அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து 100 சதவீதம் சரியாகி உள்ளது. பால் வினியோகம் சீராகி விட்டது. வேளச்சேரி விபத்தில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டனர். துரதிருஷ்டவசமாக இருவர் இறந்துள்ளனர்; அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.டிச. 11ம் தேதி பள்ளிகள் கல்லுாரிகள் திறக்கப்படும். இன்றும் நாளையும் அனைத்து பள்ளி கல்லுாரி வளாகங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் வெளியேற்றப்படும். பள்ளிகளை துாய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.சில பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்படுகின்றன. அங்கு தங்கியிருப்போர் இன்று வீடு திரும்பி விடுவர். வாகனங்கள் பழுது நீக்க வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி உள்ளோம். இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக பழுது நீக்கம் செய்து தரும்படி கேட்டுள்ளோம்.மாணவ மாணவியரின் புத்தகங்கள் நோட்டுகள் சான்றிதழ்கள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி வருவாய் துறை இணைந்து மாற்று சான்றிதழ் வழங்க முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மக்கள் சரமாரி கேள்வி
வீனஸ் காலனி மக்கள் நேற்று ஆய்வுக்கு வந்த தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை வெள்ளம் வந்தது ஏன் என சரமாரி கேள்விகள் எழுப்பினர். தண்ணீரை வெளியேற்றி விட்டோம். இனி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் எனக்கூறி சமாளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us