தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுய மதிப்பீடு முறைக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு

சுய மதிப்பீடு முறைக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு

சுய மதிப்பீடு முறைக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு


UPDATED : அக் 31, 2024 12:00 AM

ADDED : அக் 31, 2024 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2024 12:00 AM ADDED : அக் 31, 2024 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், தங்களை சுய மதிப்பீடு செய்வதற்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், தங்களது செயல்பாடு, திறன், விடுப்பு உள்ளிட்ட விபரங்களுடன், தங்களை சுய மதிப்பீடு செய்து, அதன் விபரங்களை, பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மருத்துவ துறையில் காலிப் பணியிடங்களால், டாக்டர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது, அவர்களை அவர்களே சுய மதிப்பீடு செய்யக் கோருவது ஏற்புடையது இல்லை. இதை பொது சுகாதாரத் துறை திரும்பப் பெற வேண்டும் என, மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us