வரும் மே 3ல் கோவையில் வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி
வரும் மே 3ல் கோவையில் வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி
UPDATED : மே 01, 2025 12:00 AM
ADDED : மே 01, 2025 10:29 AM

கோவை :
சாண்டாமோனிகா ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவனம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 800க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பல்கலை, கல்லுாரிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக திகழ்கிறது.
இந்நிறுவனம் சார்பில், வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி, அவிநாசி ரோடு, ரேடிசன் புளூ ஓட்டலில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. கல்விக் கடன் அளிப்பதில் முன்னணியில் திகழும் கிரெடிலா நிறுவனம், கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சராக உள்ளது.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலை, கல்லுாரிகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை, இக்கண்காட்சி வழங்குகிறது.
தகுதியின் அடிப்படையில், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்சிப், விண்ணப்ப கட்டண சலுகைகள் மற்றும் உடனடி சுயவிபர மதிப்பீடுகள் உள்ளிட்ட வாய்ப்புகளை பெறலாம்.
உலகளாவிய கல்வி நிறுவனங்களில் சேர, உடனடியாக விண்ணப்பிக்கும் வசதியினையும் இக்கண்காட்சி வழங்குகிறது. தேவையான விசா உதவிகளும் செய்யப்படுகிறது.
மேலும் விபரங்களை, 98403 38888, 98452 43311 ஆகிய, மொபைல் எண்கள் மற்றும் www.santamonicaedu.in இணையதள முகவரி வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

