புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நேரடி சேர்க்கை
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நேரடி சேர்க்கை
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 08:53 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இந்த மாணவர் சேர்க்கை இம்மாதம் 6-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாடத்திட்டங்கள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்கள் கல்லூரியின் இணையதள pucc.edu.in முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்று சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை கிடைக்காத மாணவர்கள் நேரடி செயற்கை நடைமுறையில் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள படிவத்தின் மூலம் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் பாடங்களை தெரிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத மாணவர்கள் புதிய விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என்றும் தங்களுக்கு விருப்பமான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுக்கவும், வகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களுக்கு இணையதள முகவரிக்குச் சென்று அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

