தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ.,


UPDATED : ஆக 12, 2025 12:00 AM

ADDED : ஆக 12, 2025 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2025 12:00 AM ADDED : ஆக 12, 2025 09:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அடுத்த கல்வியாண்டு முதல், 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து, தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., தேசிய கல்வி கொள்கை - 2020 மற்றும் என்.சி.எப்.எஸ்.இ., எனப்படும், கல்வி கொள்கைக்கான தேசிய பாடத்திட்டம் கட்டமைப்பு பரிந்துரையின்படி, கற்றல் மேம்பாட்டு செயல்முறைகளை அறிமுகம் செய்து வருகிறது. மாணவர்கள் மனப்பாடம் செய்து, கல்வி கற்கும் சூழலை மாற்றி, சிந்தித்து படிக்கும் அம்சங்களை, தேசிய கல்வி கொள்கை - 2020 வழங்குகிறது.

அத்துடன், மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை வலியுறுத்துகிறது. இந்த தேர்வு முறையை, சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியம், கடந்த 2014ல் நடைமுறைப்படுத்தியது. அப்போது, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள்; பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொருளாதாரம், உயிரியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள், திறந்த புத்தக தேர்வு முறையில், நடத்தப்பட்டன.

ஆனால், 2017 - 18ம் கல்வியாண்டில், இத்தேர்வு முறை நிறுத்தப்பட்டது. மீண்டும் பழைய தேர்வு முறையே அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற, இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில், புத்தகத்தை பார்த்து தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப் பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., கல்வி வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம், கடந்த ஜூன் மாதம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2026 -27ம் கல்வியாண்டு முதல், புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஆனால், இந்த தேர்வு முறை கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ள பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம் என, சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. இப்புதிய தேர்வு முறைக்கு, மாதிரி வினாத்தாள், விரிவான வழிகாட்டுதல்களை, சி.பி.எஸ்.இ., வழங்கும்.

இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், தேசிய கல்வி கொள்கையின் அம்சமான, புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை, சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மாணவர்களின் சிந்தனை திறனை, இந்த தேர்வு முறை வளர்க்கும். புத்தகத்தை நன்றாக படித்த மாணவர்கள் மட்டுமே, இந்த தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். சிந்திக்க வைக்கும் வகையில் கேள்விகள் இடம் பெறும்; இது, நல்ல திட்டம், என்றார்.

இது குறித்து, அமைச்சர் மகேஷிடம், திருச்சியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு,புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா என கேட்டு விட்டு புறப்பட்டு சென்றார்.

பள்ளிகளுக்கு தனி வானொலி

சி.பி.எஸ்.இ., நிர்வாகக்குழு கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டவும், சமீபத்திய தகவல்களை பரிமாறவும், சமூக வானொலி துவக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதற்கான உரிமம் பெறுவது, பங்குதாரர்களை சேர்ப்பது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிக் ஷா வாணி என்ற பெயரில், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் சார்ந்த 400க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் பாட்காஸ்ட் செயல்பாட்டில் உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us