சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையம்
சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையம்
UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 04:48 PM

சென்னை:
சென்னைல் ஐஐடி செயற்கை நுண்ணறிவுக்கான உயர்சிறப்பு மையத்தை நிறுவ உள்ளது.
இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளது. சிபியு, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும்.
ஜிரோ லேப்ஸ் ஆனது காம்பேக்ட் ஏஐ-ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி -ல் இன்று வெளியிட்டது. காம்பேக்ட் ஏஐ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தளமாகும். எளிதில் கிடைக்காத ஜிபியு (கிராபிக்ஸ் புராசஸிங் யூனிட்ஸ்)-க்கு பதிலாக சிபியு-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், ஜிரோ ஆய்வகம், ஐஐடிஎம் பிரவர்த்தக் ஆகியவற்றின் இந்த முயற்சி இயற்கையால் ஈர்க்கப்பட்ட ஒன்றாகும். இதில் அவர்கள் குறைந்த செலவில் வழக்கமான கணினி இயந்திரங்களில் துல்லியமான அனுமானங்களை வழங்க தனிப்பயனாக்கப்பட்ட, பயிற்சிபெற்ற டொமைன்-குறிப்பிட்ட மாதிரிகளைப் பயன்படுத்தும் தளத்தை வழங்குகிறார்கள். நவீன ஹைப்பர்ஸ் கேலர் அமைப்புகளை வாங்கக் கூடியவருக்கும் முடியாதவருக்கும் இடையிலான சாத்தியமான ஏஐ பிளவைத் தடுப்பதில் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு முக்கிய படியாகும் என்றார்.
இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ராயல் சொசைட்டியின் பெலோஷிப் பெற்றவரும், டூரிங் விருது பெற்றவருமான டாக்டர் விட் பீல்ட் டிபி, சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனர் ஸ்காட் மெக்னீலி, ஏஓஎல்டைம் வார்னர் முன்னாள் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் தலைமை நிலைப்பாட்டு அதிகாரியுமான டாக்டர் வில்லியம் ஜே.ராடுசெல், ஐஐடி பெங்களூர் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சடகோபன், ஏபிஐ ஜீ செரண்ட், பைபர் லேன் நிறுவனர் ராஜ்சிங் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

