தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்பிரிவு படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தொழிற்பிரிவு படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தொழிற்பிரிவு படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 17, 2025 12:00 AM

ADDED : செப் 17, 2025 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2025 12:00 AM ADDED : செப் 17, 2025 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 'இண்டஸ்ட்ரி 4.0' என்ற தொழிற்பிரிவு படிப்புக்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கலெக்டர் பவன்குமார் அறிக்கை:

2025-ம் ஆண்டுக்கான கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிநவீன வசதிகளுடன் கூடிய இண்டஸ்ட்ரி 4.0 என்ற தொழிற்பிரிவு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில், நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 30 கடைசி நாள். சேர விரும்புவோர் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்களுடன், கோவையில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு, கோவை மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை, 88254 34331 என்ற எண்ணிலும், மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் - 97156 26813, ஆனைகட்டி தொழிற்பயிற்சி நிலையம் - 88383 39946, வால்பாறை தொழிற்பயிற்சி நிலையம் - 94421 75780, பேரூரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை, 95665 31310, 81220 47178 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us